சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வாக்கு சேகரித்து வருகின்றார்.
வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக கலைக்கோட்டுதயம் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் அக்கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்றுவருகிறது.
6வது நானான இன்று 1612-2017 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்கிறார். காலை 9.30 மணி முதல் பகல் 12 மணிவரை அவர் வாக்கு சேகரிக்கிறார்.
39வது வட்டம், கடற்கரை சாலை, செரியன் நகர், வீரராகவன் தெரு, தேசிய நகர், பூண்டி தங்கம்மாள் தெரு, மார்கெட் பாரம், ஆவூர் முத்தையா தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை செய்யவுள்ளார். 39வது வட்டம், வெற்றி திருமண மண்டபம், குயிலிக்குப்பம், MPT குடியிருப்பு, நாகூரான் தோட்டம், மீனவர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 39வது வட்டம், நாகூரான் தோட்டம் சந்திப்பு, இலட்சுமி கோயில் பேருந்து நிறுத்தம் அருகே இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சி உரையாற்றுகிறார்.

No comments:
Post a Comment